இமாசலப் பிரதேசத்தில் தொடர் மழை; 2 பேர் பலி – 70 பேர் வெள்ளத்தில்

0
485
Morethan 150 peope stranded Lahaul Spiti Heavy rain Himachal Pradesh

இமாசலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்ததுடன், தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 70 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். (Morethan 150 peope stranded Lahaul Spiti Heavy rain Himachal Pradesh)

இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதனால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மழை மற்றும் வெள்ளத்தால் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள அதேவேளை, காங்ரா மாவட்டத்தின் லஸ்க்வாரா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குலு மாவட்டத்தின் பஜோரா கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் வெள்ளத்தால் மணாலி சுற்றுலாத் தலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பஸ் ஒன்று, மண்சரிவு காரணமாக வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த பஸ் பீஸ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சம்பவத்தின் போது பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எவுதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தின் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 70 க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து கார் மற்றும் பஸ்களில் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கி தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் ஊரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

வெள்ள நீர் வடிந்து நிலைமை சீராவதற்கு இன்னும் 4 நாட்கள் ஆகும் எனவும், அதுவரை விடுதிகளிலேயே தங்கியிருக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகின்றது.

அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை இமாசல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 170 மில்லி மீற்றர் மழை பதிவானதுடன், சுற்றுலா பகுதியான மணாலியில் மட்டும் 121 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பஞ்சாப், சத்தீஷ்கார், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ததுடன், அந்த மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Morethan 150 peope stranded Lahaul Spiti Heavy rain Himachal Pradesh