தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்

0
513
swachh bharat mission saved india children india tamil news

தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. (swachh bharat mission saved india children india tamil news)

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை என்பது 2017 ஆம் ஆண்டு 8 இலட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

அதற்கு முந்தைய ஆண்டு 10 இலட்சத்துக்கும் அதிகமாக இருந்ததுடன், சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

powered by Rubicon Project பாதுகாக்கப்பட்ட குடிநீர், கையை சுத்தப்படுத்தி உணவு உண்ணும் பழக்கம், உணவு பாதுகாப்பு, கழிவறை பயன்பாடு அதிகரித்தது, திறந்தவெளியில் மலம் கழிப்பது குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒன்றிணைந்து தொற்று நோய்களை கட்டுப்படுத்தி இறப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.
முறையான கழிவு அகற்றுதல் வசதியின்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது போன்றவைதான் குழந்தைகளை டயோரியா போன்ற நோய்கள் தாக்குவதற்கு 88 சதவீத காரணமாகியது.

குழந்தைகளுக்கான டயோரியாவை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக ஆறு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன் காரணமாக தொற்று நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டம் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப் புறங்களில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 85.2 மில்லியன் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

நாட்டின் 718 மாவட்டங்களில் 459 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் 9.3 சதவீத குழந்தைகளுக்கு டயோரியா பாதிப்பு ஏற்பட்டது என்றால் திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய மாவட்டங்களில் 13.9 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது தெரிய வருகின்றது.

திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் தாய்மார்கள் 62.5 சதவீதம் பேர் ஆரோக்கியமான உடல் எடையுடன் உள்ளனர்.

திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள தாய்மார்கள் 57.5 சதவீதம் பேர்தான் சரியான எடையுடன் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்த புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; swachh bharat mission saved india children, india tamil news, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News