செக்கச் சிவந்த வானம் பட பாடகியின் திக் திக் நிமிடங்கள்

0
488
Chekka Chivantha Vaanam Singer Interview, Chekka Chivantha Vaanam Singer, Chekka Chivantha Vaanam, CCV, Chekka Chivantha Vaanam latest news

பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க வைத்திருக்கிறார் சக்திஸ்ரீ கோபாலன். `செக்கசிவந்த வானம்’ படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பற்றி கேட்டால், “ரெண்டு பாடல்களுக்குமான ரெஸ்பான்ஸ் எனக்குப் பெரிய மனநிறைவை தருது. `கடல்’க்குப் பிறகு மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்துனு லெஜன்ட்ஸ் கூட்டணியில் இணைந்திருக்கறது எனக்குப் பெருமையான விஷயமும் கூட. சின்ன வயசிலிருந்தே ரஹ்மான் சார் பாட்டெல்லாம் கேட்டுதான் வளந்தேன். பாட்டு வெளிவந்ததிலிருந்து நிறைய போன் கால், மெசெஜ்னு வந்துகிட்டே இருக்கு. Chekka Chivantha Vaanam Singer Interview

சமூக வலைத்தளங்களிலும் பாடல்களுக்கான பாராட்டுகள் குவியுது. ஒருத்தர பாராட்டவும் வாழ்த்து சொல்லவும் நேரம் ஒதுக்கறாங்கன்றது பெரிய விஷயம். அது எனக்கு நடக்குதுனு நினைக்கறப்போ அந்த உணர்வே சந்தோஷம் கொடுக்குது. எந்த ஒரு கலையா இருந்தாலும் அதை உருவாக்கி பதிவு செய்யறது முதல் படிதான். அது மக்கள்கிட்ட போனதுக்குப் பிறகு, அவங்க அதை அங்கீகரிக்கும் போதுதான் முழுமையடையுதுனு நம்பறேன். குறிப்பா பூமி பூமி ரொம்பவும் வித்தியாசமான பாடல், வழக்கமான ஸ்ட்ரக்சரோ, அரேஞ்மென்டோ இருக்காது. இப்படி வித்தியாசமான ஒரு பாடலுக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கறது, எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஒண்ணு.” என்கிறார் வைரல் குரலுக்கு சொந்தக்காரி.

“சிறுவயதில் இருந்தே இசை பயின்றாலும், இசைத் துறையில் நுழையும் முடிவு தாமதமாக எடுத்ததுதான் என முன்பே சொல்லியிருக்கிறீர்கள். பாடகியாக வேண்டும் என்ற முடிவை எடுத்தது எப்போது?”

“இல்ல என்னோட முடிவு தீர்மானமா எடுத்த ஒண்ணா இல்ல. சரி, நாளையில இருந்து நம்மளுடைய துறை இசைதான்னு ஒரு முடிவ எல்லாம் நான் எடுக்கல. சின்ன வயசில் இருந்தே, இசை எனக்கு முக்கியமான ஒண்ணா இருந்தது. வருடக்கணக்கா கத்துக்கவும், பாடவும்னு இருந்தது என்னோட பயணம். ப்ளஸ் டூவுக்குப் பிறகு வெளிநாடுகள் போய் இசை பற்றி தீவிரமா படிக்கணும்னு கூட ஆசை இருந்தது. ஆனால், அது நடக்கல. அதே சமயம் ஆட்கிடெக்சர் படிக்கணும்னு ஆசையும் எனக்கு இருந்தது. இப்போவும் என்னுடைய படிப்பு சம்பந்தமான வேலைகளும் நான் செய்திட்டுதான் இருக்கேன். மியூசிக் – ஆர்கிடெக்சர்னு இரண்டு படகுகளிலும் போயிட்டிருக்கேன். கல்லூரி நாட்கள எடுத்துகிட்டாலும், படிப்போடு இசைக்கான தேடலும் இருந்துச்சு. இசை சம்பந்தமான போட்டிகளில் கலந்துக்கறது, நண்பர்களோட சேர்ந்து பாடல்கள் உருவாக்குவது, மியூசிக் பேண்ட்களில் இணைவது, இன்டிபென்டன்ட் மியூசிக் சம்பந்தமான விஷயங்களில் பங்குபெறுவது பிறகு நிறைய நிறைய நிறைய டெமோ சிடிகள எடுத்துக்கிட்டு ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு போய் வாய்ப்பு தேடுவதுனு இப்படிதான் நகர்ந்தது. காலேஜ் மூணாவது வருஷம் படிச்சிட்டிருந்த போது எனக்கு சினிமாவில் முதல் தமிழ் (சொர்க்கம் மதுவிலே – TN 07 AL 4777) பாட்டு பாடுவதற்கான வாய்ப்பு கிடைச்சது. என்னைப் பொறுத்தவரை அப்போ இருந்துதான் என்னோட பயணம் துவங்கினதா நினைக்கறேன். அதுக்கு முன்னால தினமும் பயிற்சி பண்றது, இசை சார்ந்த விஷயங்கள் எல்லாமும் பண்ணிட்டுதான் இருந்தேன். ஆனா, அதன் பிறகு பேக் வோகல்ஸ், லீட் சிங்கர், டூயட்ஸ்னு பாடுவதற்கான அழைப்புகள் அதிகம் வர ஆரம்பிச்சது. அது எனக்கு ரொம்ப எக்ஸைட்டான காலம். ஒரு பாடல் உருவாகும் போது என்னவெல்லாம் நடக்குதுன்னு பார்க்கவும் கத்துக்கவும் வாய்ப்பா இருந்தது.”
“இசைத்துறை போலவே ஆர்கிடெக்சர் மீதும் பெரிய ஆர்வம் வந்தது எப்படி? இரண்டு வித்தியாசமான துறைகளில் இயங்குவது எப்படி இருக்கிறது?”

“ஏன் ஆர்கிடெக்சர் மேல ஆர்வம் வந்ததுனு கேட்டா, அதுக்கு என்கிட்ட பதில் இல்ல. ஆனா, ஒரு இடத்தை வடிவமைக்கறது, ஒவ்வொருத்தருடைய மனநிலைக்கு ஏற்ற மாதிரி இருக்கணும்னு அதில் இருக்கும் உழைப்பும் எனக்குப் பிடிக்கும். சின்ன வயசில் நிறைய ஆர்கிடெக்சர் சம்பந்தமான ட்ராவல் ஷோக்களும் பார்ப்பேன். உலகம் முழுக்க இருக்கும் விதவிதமான இடங்களுக்குப் போய் அங்க இருக்கும் கட்டடக்கலை பற்றி அதில் காட்டும் விஷயங்கள தெரிஞ்சுக்க எனக்குப் பிடிக்கும். அதுவும் இந்தத் துறை மேல் எனக்கு விருப்பம் வரக் காரணமா இருக்கலாம். அதே மாதிரி இசைத்துறை சார்ந்த இடங்களுக்கான வடிவமைப்பு செய்யறதிலும் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. அது சம்பந்தமான இடங்களுக்கு போகும் போதும் அங்க இருக்க வடிவமைப்புகள் எல்லாம் பார்ப்பேன். இப்போ ஒரு ஸ்டுடியோவுக்குள்ள போனா, ஒரு இசைக் கலைஞராகவும், அந்த இடம் பற்றிய டெக்னிகல் விஷயங்கள் தெரிஞ்ச ஆளாவும் இருக்கறது ஒரு வித்தியாசமான பலமா எனக்கு இருக்கு. ஆர்கிடெக்சர் சம்பந்தமான வேலைகளும் நிறைய செய்திட்டிருக்கேன். அதுலையும் ஏ.ஆர்.ரஹ்மான் சாருடைய `கே.எம் காலேஜ் ஆஃப் மியூசிக் அன்ட் டெக்னாலஜி’ய வடிவமைச்சது எனக்கு கிடைச்ச பெருமையா நினைக்கறேன். நிறைய அனுபவங்களும், செயல்பாடுகளும்னு தொடருது ஆர்கிடெக்சர் பயணம்.”

“இன்டிபென்டன்ட் இசையிலும் தீவிரமா இயங்கிவருகிறீர்கள். அதில் ஆர்வம் வந்தது எப்போது, அதன் அடுத்த முன்னெடுப்புகள் என்ன?”

“ஸ்கூல் படிக்கும் போது, கவிதைகள் எழுதுவேன். நிறைய போட்டிகளிலும் கலந்துக்குவேன். காலேஜ் சேர்ந்தததுக்குப் பிறகு, கவிதைகள் எழுதும் பழக்கம் பாடல்கள் எழுதும் பழக்கமா மாறுச்சு. நண்பர்கள் சேர்ந்தா நிறைய மியூசிக், பாடல் வரிகள்னு இன்ஸ்டன்டா அங்கயே ஒரு ஜாமிங் நடக்கும். நம்ம உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் கேட்பது மாதிரி, அதை இசையா உருவாக்குவதும், பாடல்களா எழுதுவதும்னு மாறுச்சு. சின்ன குழுவா சேர்ந்து தொடங்கினோம், பிறகு `பாப் ராக்’, `ஆஃப் த ரெக்கார்ட்’னு நிறைய பேண்ட்களில் சேர்ந்தோம். காலேஜ் நாட்கள் எல்லாம் இப்படிதான் இசையால் நிறைஞ்சு கிடந்தது. போன வருஷம் இன்டிபென்டட் ட்ராக்ஸ் நிறைய உருவாக்கிட்டிருந்தோம். அது ரொம்பவே வித்தியாசமான ப்ராசஸ். ஏன்னா, நம்ம மனசுல ஒண்ணு நினைப்போம், அது என்னாவா வெளிய வரும், அதை எப்படி வடிவமைக்கறோம்னு ரொம்ப ஆர்வத்தைக் கொடுக்கும். அதுவுமில்லாம, கேபா, நவீன், லியோன்னு நிறைய நல்ல இசைக் கலைஞர்களோட வேலை செய்தது அற்புதமான அனுபவம். அடுத்த ஸ்டெப்னா, இன்னும் இது போல நிறைய பாடல்கள் உருவாக்கணும். நான் ஒரு யூட்யூப் அடிக்ட்னு சொல்லலாம், அவ்வளவு நிறைய மியூசிக் வீடியோக்கள் பார்ப்பேன். விஷுவலாகவும் பாடல்களை எப்படி ப்ரசன்ட் பண்ணலாம்ங்கற ஐடியாக்களும் போயிட்டிருக்கு.”

“பாடலாசிரியர், இசையமைப்பாளர் இந்த திறமைகளை சினிமாவிலும் விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறதா?”

“சினிமாவுக்கு இசையமைப்பது முற்றிலுமா மாறுபட்ட ஒண்ணு. அது ரொம்பப் பெரிய பொறுப்புங்கறதால அதுக்கான நிபுணத்துவம் தேவைனு நினைக்கறேன். ஒரு சூழல் கொடுக்கப்பட்டு, அதுக்கு இசையமைக்கறது சிக்கலானது. அதுவே இன்டிபென்டன்ட் மியூசிக்ல பெரிய சுதந்திரம் இருக்கும். அது எதைப் பற்றிய பாடலாவும் இருக்கலாம், எந்த உணர்வையும் பிரதிபலிக்கலாம்னு எல்லைகள் எதுவும் கிடையாது. ஆனால், சினிமாவில் இசையமைக்க நிறைய வரையரைகள் இருக்கு. அதுக்குன்னு ஒரு கதை இருக்கும், கதாபாத்திரங்கள் இருக்கும், பட இயக்குநர் நினைச்சு வைச்சிருக்கறத பிரதிபலிக்கும்படியா நாம உருவாக்கும் இசை இருக்கணும். எல்லாம் முடிச்சு வெளிய வந்ததும், அது மக்களுக்கும் பிடிக்கணும். இதை எல்லாம் பூர்த்தி செய்யும் அளவுக்கான திறமைகளை வளர்த்துகிட்டுதான், தொடங்க முடியும்.”

“ஒரு பாடகியாக பல இசையமைப்பாளர்களுடன் வேலை செய்யும் அனுபவம், நீங்க உருவாக்கும் பாடல்களில் உதவியாக இருக்கிறதா?”

“ஒவ்வொரு இசையமைப்பாளர்களுக்கும் தனி ஸ்டைல் இருக்கு. அதனாலதான் ஒரு பாடல் கேட்டதும் இவர்தான் இந்த ஸ்டைல்ல பண்ணியிருப்பார்னு கண்டுபிடிப்போம். ஆனா, அந்த ஸ்டைலோ அந்த சவுண்டிங்கோ அவங்களுக்கு பல வருடமா பணியாற்றினதாலதான் வந்திருக்கும். நமக்கான தனித்தன்மையை உருவாக்க நாமதான் வேலை செய்யணும். அது இசையமைப்பாளர்களோட வேலை செய்யும் அனுபவத்தால் மட்டும் நமக்கு கிடைச்சிடாது. ஆனால், கம்போஸிங், அரேஞ்ஜிங், ப்ரட்யூசிங்னு ஒரு பாடல் உருவாகும் ப்ராசஸ் நிறைய நபர்களுடைய கூட்டு முயற்சி. இதில் நாம நிறைய ஆட்கள்கிட்ட இருந்து நமக்குத் தேவையானத சரியா கேட்டு வாங்கணும். ஒரு மியூசிக் டைரக்டரால, கிட்சாரிஸ்ட்ட கூப்பிட்டு என்ன தேவையோ அதைத் துள்ளியமா கேட்டு வாங்க முடியும். பாடகர்கள்கிட்ட எப்படி வேணும்னு எளிமையா புரிய வைக்க முடியும். இதுமாதிரியான விஷயங்கள நாம கவனிக்கும் போது நிறையவே இன்ஸ்பையரிங்கா இருக்கும். நாம பண்ணும் போதும் நமக்குத் தேவையானத அழகா கேட்டு வாங்கும் தெளிவு முதல்ல நமக்கு இருக்கணும்னு சில பாடங்கள் கிடைக்கும். ஆனா, அதுவும் கூட அவ்வளவு சீக்கிரமா எல்லாம் வந்திடாது, தொடர்ந்து அதுக்கான பயிற்சியும் அனுபவமும் தேவைப்படும். இப்போ யோசிக்கும் ஒரு பாட்டை இப்போவே பண்றது ஒரு மாதிரி இருக்கும். இன்னும் நிறைய அனுபவம் கிடைச்ச பிறகு பண்ணா இன்னும் பெட்டரா இருக்கும்ல. அது மாதிரிதான்.”

“தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாடுகிறீர்கள். அவருடன் பணியாற்றும் அனுபவம் எப்படியானது?”

சில இசையமைப்பாளர்களுக்கு அவங்களுடை வொர்க்கிங் பேர்ட்டன் ஒண்ணு இருக்கும். அது அவர்கூட தொடர்ச்சியா வேலை செய்யறவங்களால சுலபமா கண்டுபிடிச்சிட முடியும். ஆனா, ரஹ்மான் சாருக்குன்னு அப்படியான டெம்ப்ளேட், பேர்ட்டன் எதுவும் கிடையாது. அவரோட சேர்ந்து வேலை செய்திருக்க ஒவ்வொரு பாட்டும் ஒரு புது அனுபவமாதான் எனக்கு இருந்திருக்கு. அவர்கிட்ட ஸ்டுடியோல இருந்து அழைச்சு, நான் அங்க போய் இறங்குறேன்னா, அவர் இன்னைக்கு என்ன மாதிரியான பாட்டு பண்ணுவார், என்ன எதிர்பார்ப்பார்னு எதையும் யூகிக்கவே முடியாது.

`மரியான்’ படத்துக்காக எங்க போன ராசா ரெக்கார்ட் பண்ண அனுபவம் ரொம்ப ஸ்பெஷலானது. அதனுடைய மேக்கிங் வீடியோ கூட வந்ததை பார்த்திருப்பீங்க. அந்த வீடியோ பாட்டு ரெக்கார்டிங்க்கு முந்தின நாள் எடுத்தது. அதுக்குப் பிறகு அடுத்த நாள் மதியத்தில் தொடங்கி சாயங்காலம் வரை ஒரு செஷன் முடிஞ்சு, அப்பறம் ரெக்கார்ட் பண்ணதுதான் எங்க போன ராசா. கேபா ஒரு பூத்ல, நான் ஒரு பூத்ல முன்னால ரஹ்மான் சார்னு அந்த ரெக்கார்டிங் செமயா இருந்தது. ஏன்னா வழக்கமா ஒரு பாட்டு பண்ணும் போது அதில் பார்டிசிபேட் பண்ற எல்லாரும் இருக்கமாட்டாங்க. அது ரொம்ப ரொம்ப அரிதாக நடக்கும் ஒண்ணு. இது போலதான் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு அனுபவம். நெஞ்சுக்குள்ள ஒரு மாதிரி, எங்க போன ராசா ஒரு மாதிரி, பூமி பூமி ஒரு மாதிரி, கள்ள களவாணி ஒரு மாதிரினு புதுப்புது அனுபவம் அவர் கொடுக்கும் பாடல்கள்ல இருக்கும். ஆனா, அவர்கிட்ட ஆச்சர்யப்படும் ஒரு விஷயம், யார்கிட்ட என்ன ஸ்பெஷலோ அதை கண்டுபிடிச்சு, கச்சிதமா அதை வெளிக் கொண்டுவருவார். அது எப்படிப் பண்றார்னே தெரியாது… ஆனா, ஹி இஸ் வெரி குட் அட் டூயிங் தட். அதே மாதிரி பாடகர்கள கம்ஃபர்ட்டா வெச்சுக்கறதிலும் செம்ம்ம கேரக்டர். அது சாயங்காலமோ அதிகாலை நாலு மணியோ நம்மள ஃப்ரஷ்ஷா மாத்தி வேலை வாங்குவார்.”

“அவர் முதன் முதலில் பாராட்டிய தருணம் நினைவிருக்கிறதா?”

“நெஞ்சுக்குள்ள பாடறதுக்கு முன்னால, ரஹ்மான் சாருடைய ஸ்டுடியோவுக்குப் போய் என்னோட டெமோ சிடி எல்லாம் கொடுத்தேன். அவர் வாங்கிட்டுப் போயிட்டார், எனக்கு அது பயங்கர பக் பக் மொமண்ட்டா இருந்தது. எத்தனை பாட்டு கேட்டாரோ, எந்த ஆடர்ல கேட்டாரோ எதுவும் தெரியல. வெளிய வந்தவர் “மேன் யூ சவுண்ட் அமேஸிங்’ன்னார். இதுபோதும் தெய்வமேனு இருந்துச்சு எனக்கு. அதுக்குப் பிறகு நெஞ்சுக்குள்ள பாடி முடிச்சு கேட்டதுக்கு அப்பறம் ரொம்ப சந்தோஷப்பட்டார். மணிரத்னம் சார், வைரமுத்து சார், ரஹ்மான் சார்னு இவங்களுடைய கலையை பார்த்து வளர்ந்தவங்க நாம. அதனால, அவங்ககிட்ட இருந்து பாசிட்டிவான சின்ன தலையசைப்பு வந்தாலே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்… நாம சரியாதான் செய்திருக்கோம்னு திருப்தி வந்திடும்.”

“உங்கள் இசைப்பயணத்திற்கு வீட்டில் ஆதரவு இருந்தா? ஒவ்வொரு பாடல் வெளியாகும் போதும் வீட்டில் என்ன ரியாக்‌ஷன்?”

“எங்க வீட்ல எப்போதும் இசை சம்பந்தமான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவாங்க. எங்க அண்ணன் நிறைய இங்லீஷ் மியூசிக் கேசட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வருவார். அந்த மாதிரி கேட்க ஆரம்பிச்சதுதான் வெர்ஸ்டன் மியூசிக் எல்லாம். பிறகு நானே அதை எல்லாம் தேடி கேட்க ஆரம்பிச்சேன். அம்மாவும் ரொம்ப சப்போர்ட். பாட்டு போட்டிகள்ல எல்லாம் கலந்துக்க வைப்பாங்க. கர்னாடிக் க்ளாஸ், இன்டர் ஸ்கூல், ஸ்டேட் லெவல்னு அவங்க அழைச்சிட்டுப் போய் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துவாங்க. வெற்றி, தோல்விங்கறத் தாண்டி, வாய்ப்பு கிடைக்கறதுங்கறது அப்போ பெரிய விஷயம். காலேஜ் போனதுக்குப் பிறகு பேண்ட் காம்படிஷன்னு நிறைய போனப்போ, `ஏன் பசங்களோட சுத்தற?’, `போன வாரம்தான ஒரு ஷோ போனிங்க மறுபடியும் என்ன?’னு அவங்களுக்கு ஒரு டென்ஷன் வந்தது. அது நியாயமானதும் கூட. ஆனா, இது இப்படிதான் இருக்கும்ங்கறதால அப்பறம் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

“பாட்டு வெளியாகி பாராட்டுகள் வருவது போல், நீங்கள் பாடிய பாடல் வராத போதோ, படத்தில் இடம்பெறாத போதோ எப்படி உணர்வீர்கள்?”

“பாடினது வராத போது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும். ஆனா, அதையும் விட இன்னொன்னு நடக்கும். பாட்டு கேட்டு பார்த்தா அதில் என் வாய்ஸ் இருக்கும். ஆனா, ட்ராக் லிஸ்ட்ல என்னோட பெயரே இருக்காது. சில நேரம் நாம பாடியிருப்போம், அது வெளிய வரும் போது வேற ஒருத்தருடைய வாய்ஸ்ல வரும். இதுமாதிரி எல்லாம் நடக்கும். சில பாடல்கள் எல்லாம் நாம ரொம்ப கனெக்ட் ஆகி பாடியிருப்போம், அதனால அந்தப் பாட்டு வெளிய வர்றதுக்காக காத்திருப்போம். அது வரும் போது நாம பாடினது இல்லைனா ரொம்பவே வருத்தமா இருக்கும். இருந்தாலும் இந்த பயணம் மூலமா நிறைய கத்துகிட்டேன். பாடும் போது எனக்குள்ள வரும் சந்தோஷம், நல்ல பாடல் ஒண்ண பாடிட்டோம்னு ஒரு திருப்தி இருக்குல்ல அதில் ஒரு நிறைவு இருக்கறதை உணர்ந்தேன். ரெக்கார்ட் பண்றோம்ங்கறது சந்தோஷம். ஆனா, அது வெளிய வருமா, படத்தில் வருமா எல்லாம் போனஸா கிடைக்கறதுதான். சில சமயம் படத்தில் இடம்பெறாத பாடலை சொல்லிக்காட்டி கூட, அது எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்வாங்க. `ராஜா ராணி’ல அஞ்ஞாடே பாட்டெல்லாம் அந்த மாதிரி இன்னும் நிறைய பேர் சொல்றாங்க”

“இசைத்துறையோ, ஆர்கிடெக்சரோ இல்லை இவை தவிர்த்தோ, அல்டிமேட் கோல் எதுவும் இருக்கிறதா?”

“எனக்கு நிறைய விஷயங்கள் பண்ணனும்னு இருந்தது. ஒரு ட்ராவல் ஷோ ஹோஸ்ட் பண்ணனும், விளம்பரப்பட இயக்குநராகணும்னு நிறைய. ஆனா, என்னைய நானே க்ளோனிங் பண்ணாதான் இதை எல்லாம் பண்ணமுடியும். அதனால மியூசிக் – ஆர்கிடெக்சர் ரெண்டுல மட்டும் ரொம்ப கவனம் செலுத்திட்டிருக்கேன். காலேஜ் சமயத்தில் பாடல்கள் பாட ஆரம்பிச்ச போது கூட நிறைய பேர் கேட்டாங்க. பாட்டா? படிப்பா சம்பந்தமான வேலையா? எதை தேர்ந்தெடுக்கப் போறனு. எனக்கு இது ரெண்டுமே வேணும். ரெண்டுலையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எக்ஸ்ப்ளோர் பண்ணனும்.”

Source – NDTV

Chekka Chivantha Vaanam Singer Interview, Chekka Chivantha Vaanam Singer, Chekka Chivantha Vaanam, CCV, Chekka Chivantha Vaanam latest news
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்