அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம்

0
364
Opened mining train station after 17 years US

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். அதில் மூவாயிரம் பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். Opened mining train station after 17 years US

இரட்டை கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது அதன் அருகே இருந்த சுரங்க ரெயில் நிலையமும் பலத்த சேதம் அடைந்தது. பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இதனால் அந்த ரெயில் நிலையம் மூடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ரெயில் நிலையம் சீரமைக்கும் பணியில் மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து ஆணையம் ஈடுபட்டது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த ரெயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது. அதை மக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ரெயில் ஓடுவதை போனில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.

tags :- Opened mining train station after 17 years US

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்