தாயொருவர் தனது பத்துமாத குழந்தையை ஏழாவது தளத்தில் இருந்து வீசி கொலைசெய்த பெண் ஒருவருக்கு நேற்று எட்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. France lady killed 10 month child case
Raphael என அழைக்கப்பட்ட 10 மாத குழந்தையை கடந்த 2015, ஓகஸ்ட் 29 ஆம் திகதி பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து தூக்கி வெளியே எறிந்துள்ளார். எறிந்த உடனே குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. எந்த தாயும் செய்யாத, மிகவும் மோசமான மற்றும் புரியாத சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து 34. வயதுடைய குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு மிக நீண்ட மற்றும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட Myriam D எனும் தாய், முதல் நாள் விசாரணைகளில், ‘நானும் எனது குழந்தையும் பாய்வதாக தான் எண்ணியிருந்தோம். என்னை ஏதோ ஒன்று தடுத்துவிட்டது, அதனாலே தான் அவனை போகவிட்டேன்’ என தெரிவித்திருந்தார். இதன் பிறகு குழந்தையின் தந்தையும் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு, இச்சம்பவத்தினால் மிகவும் மனமுடைந்து இருந்த அவர் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நேற்று பரிஸ் Assize நீதிமன்றத்தில், குறித்த பெண்ணுக்கு எட்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.