நான் பாலா சார் ஸ்டூடன்ட் – வில்லனை மிரட்டிய வரலட்சுமி…!!!

0
407
Varalakshmi scares villain actor, Varalakshmi scares villain, Varalakshmi scares, Varalakshmi, villain actor, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

டீகே அடுத்து இயக்கும் படம் ‘காட்டேரி’. வைபவ் ஹீரோ. வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஹீரோயின்கள். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர், நடிகைகள் பங்கேற்று பேசினார்கள். அப்போது படப்பிடிப்பில் தன்னை வரலட்சுமி மிரட்டியதுபற்றி காமெடி, வில்லன் நடிகர் ரவிமரியா கூறினார். அவர் கூறும்போது, ’இந்த படத்தில் எனக்கு சூப்பர் வேடம் என்று இயக்குனர் கூறினார்.Varalakshmi scares villain actor

கிட்டத்தட்ட என்னை 3வது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள். சொல்லப்போனால் நடிகை ரம்பாபோல் பெண் வேடத்துக்கு மாற்றிவிட்டார்கள். பெண் வேடம் அணிந்திருந்தபோதும் என்னை ஹீரோயின்கள் பக்கம் செல்லவிடாமல் ஹீரோ வைபவும், கருணாகரனும் பிடித்துவைத்து கொண்டார்கள். வரலட்சுமியுடன் ஒரு காட்சியில் நடிக்கும்போது அவர் என்னை உதைக்க வேண்டும்.

என்னைப் பார்த்து பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கீங்களா என கேட்டார். எதற்கு என நான் கேட்க அவரோ ரொம்ப கூலாக, நான் பாலா சார் ஸ்டூடன்ட். உதைக்கிறது எல்லாமே ரியலா பண்ணித்தான பழக்கம் என்று தன் பங்குக்கு டெரர் காட்டினார்’ என்றார் ரவிமரியா. நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் படத்தில் ஏற்ற அந்தந்த கதாபாத்திரங்களின் கெட்டப்பிலேயே மேக் அப் அணிந்து வந்திருந்தனர்.

Tag: Varalakshmi scares villain actor

எமது ஏனைய தளங்கள்