உதய கம்மன்பில மீது பழி போட்டுவிட்டு அநுர தப்பிப்பதை ஏற்க முடியாது: சுகாஷ்

0
35

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவை (Udaya Gammanpila) விட மோசமான ஒரு இனவாதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் (Kanakaratnam Sukash) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அராலியில் நேற்றையதினம் (22) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “இணைந்திருந்த வடக்கு மற்றும் கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர்கள் ஜேவிபியும் அநுரவுமே.

சந்திரிகாவினுடைய ஆட்சி கலத்தில் அநுரகுமார விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொண்று புதைக்கப்பட்டார்கள்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அநுரகுமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே (Colombo) சிங்கள மக்களை திரட்டி முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள்.

இப்போது உதய கம்மன்பில மீது அநுரகுமார பழி போட்டுவிட்டு தான் தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.