“என் அம்மாவிற்காக கூட இதை செய்ய மாட்டேன் ” அடம் பிடிக்கும் மும்தாஜ் : கெஞ்சும் ரித்விக்கா

0
92
Tamil Big Boss New promo Update

பிக் பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் பிக் பாஸ் டாஸ்குகள் எல்லாம் மிகவும் ரணகளமாக இருக்கின்றது . (Tamil Big Boss New promo Update)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷனில் ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்ராயன், விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகிய 5 பேர் உள்ளனர்.  இந்த நாமினட் ப்ரோசசில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை கட்டாயம் செய்ய வேண்டும் .அப்பொழுது தான் நாமிநேசனில் இருந்து தப்பிக்க முடியும் .

இதன் காரணமாக ஜனனி நாமினேஷனில் இருந்து தப்பிக்க மொட்டையடித்த பாலாஜி, ஐஸ்வர்யா தப்பிக்க ஹேர்கலரிங் செய்த சென்ராயன், சென்ராயனுக்காக முடியைக் கட் செய்த ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மிக்காக டாட்டூ போட்டுக் கொண்ட ரித்விகா என எல்லோரும் இந்த வாரம்  பரபரப்பாக இருந்தனர் .

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில், ரித்விகா மும்தாஜிடம், என்னை நீங்க காப்பாத்தணும்னா நீங்க உங்க ஹேர்கலர எலக்ட்ரிக் க்ரீன் கலரா மாத்திக்கணும்ன்னு சொல்ல, அது என்னால முடியாது, என்ன எல்லாரும் செல்பிஷ்ன்னு சொன்னாலும் பரவாயில்லைன்னு மும்தாஜ் சொல்கிறார். உடனே ரித்விகா நீங்க எனக்காக செய்வீங்கன்னு நினைச்சேன்னு உருக்கமாகப் பேச என் அம்மாவுக்காகக் கூட பண்ண  மாட்டேன்னு மும்தாஜ் சொல்லி விட்டார் .

இந்நிலையில் பிக பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரும் மற்ற போட்டியாளர்களை காப்பாற்ற டாஸ்குகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் மும்தாஜ் மட்டும் மறுப்பது பிக் பாஸ் போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மாட்டு சாணத்தில் மூழ்கிய நாயகி… கண்ணீருடன் அவரது குடும்பம்!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து!
சூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்!
பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!