ஆர்ப்பாட்ட பேரணி புகைப்படங்களை கேலி செய்த ரஞ்சன் ராமநாயக்க!

0
369

கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பசந்த யப்பா அபேவர்தன ஆகியோர் பகிர்ந்த போராட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Joint Opposition Party Protest Ranjan Ramanayake Statement Tamil News

கூட்டு எதிரணியினர் நடத்திய போராட்ட புகைப்படங்களை கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பசந்த யப்பா அபேவர்தன ஆகியோர் தமது சமூக வலைத் தளங்களில் பகிர்ந்திருந்திருந்தார்கள்.

குறித்த பகிர்வு தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக “உங்களுக்கு தெரியும் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது என்று, இவ்வாறு நாமல் ராஜபக்ஷ அணியினர் பகிர்ந்த புகைப்படம் நுகேகொட பேரணியில் எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.

இது கடந்த 2015 ஆம் ஆண்டை விட உங்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே எப்படி நுகேகொட பேரணி புறக்கோட்டையாக மாறியது என தெரியவில்லை” என கேலி செய்திருந்தார்.

இதனை அடுத்து குறித்த இருவரின் சமூக வலைத்தள பகிர்வும் நீக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடயம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites