தமிழில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” வீட்டில் இருந்து இந்த வாரம் டேனி வெளியேற்றப்பட்டுள்ளார்.Daniel eliminated Biggboss house Yesterday
நேற்றைய ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் யார் வீட்டில் இருந்து வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை எகிற வைத்தது. அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்து வந்தனர்.
அந்தவகையில், இந்த வார எவிக்சனில் பாலாஜி, டேனி, ஜனனி உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் டேனி வெளியேறியுள்ளார். இவர் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஒப்பிடும் போது டாஸ்க் அனைத்தையும் சிறப்பாக விளையாடுவார்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களாக டேனி, மும்தாஜ்க்கு சப்போர்ட் செய்வது போல் பேசி வந்ததன் காரணமாக தான் இவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் டேனியின் அம்மா மற்றும் அவரது காதலி ”பிக்பாஸ்” வீட்டுக்குள் வந்தனர். அதன்பின் டேனியின் காதலுக்கு அவரது காதலி வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும், வெளியே போனதும் நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
மேலும், டேனி அவரது காதலியை ”குட்டு” என்றே செல்லமாக கூப்பிடுவார். இதன்மூலம் ”பிக்பாஸ்” வீட்டில் இருந்து வெளியே சென்ற டேனி முதலாக அவரது காதலி குட்டுவை தான் பார்க்கப்போவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!