{ today mithiri pala sirisena birthday }
மைத்திரிபால சிறிசேன என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 திகதி இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் ஆவார்.
1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அசீர்வதித்து நாடாளாவிய ரீதியில் பல சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Tags: today mithiri pala sirisena birthday
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :