ஆயுதமா ? விசாரணை நடத்துக கோருகின்றார் ஹிஸ்புல்லா

0
411
Hisbulla Muslims Ministers Weapons Allegations

முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம் இருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார் Muslim Ministers Weapons Allegations

குறித்த குற்றச்சாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, குற்றச்சாட்டு தொடர்பில் விரைவாக, விரிவான விசாரணையொன்றை நடத்துமாறு பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களின் விடுதலைக் கட்சியினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அக்கட்சின் தலைவரான இன்பராசா கந்தசாமி என்பவரினால் இக்குற்றச்சாட்டு வெளியிடப்பட்டது.

எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களிடம் இருந்த 5 ஆயிரம் ஆயுதங்கள் தன்னிடமும், அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடமும் இருப்பதாக அவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

அந்த ஆயுதங்கள் தற்பொழுது கிண்ணியா, காத்தாண்குடி மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் இருப்பதாகவும் இன்பராசா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Muslims Ministers Weapons Allegations

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 

Tags:Muslims Ministers Weapons Allegations,Muslims Ministers Weapons Allegations