புதையல் அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது!

0
309
Police arrested eight persons involved treasure hunt artifacts

(Police arrested eight persons involved treasure hunt artifacts)

அகுணுகொலபெலஸ்ஸ, ஜதுர பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியார் தோட்டம் ஒன்றில் புதையல் அகழும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தெனியாய மற்றும் அகுணுகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Police arrested eight persons involved treasure hunt artifacts)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites