எல்லை நிர்ணய அறிக்கைக்கும், எனது அமைச்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை – பைஸர் முஸ்தபா

0
338
no connection Boundary Statement my Ministry Faiser Mustafa

(no connection Boundary Statement my Ministry Faiser Mustafa)

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களை திட்டமிட்டபடி ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட மீளாய்வு குழுவே பரிந்துரைகளை விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

உள்ளூராட்சி மன்ற அமைச்சர் கொண்டு வந்த ஒரு பிரேரணை தோல்வியடைய செய்யப்பட்டதுடன் அந்த பிரேரணைக்கு அவரே எதிராக வாக்களித்துள்ளார் என்று எதிர்தரப்பினரும் அரசாங்க தரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கும், எனது அமைச்சுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.

எல்லை நிர்ணய அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அதிகாரம் மாத்திரமே தனக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(no connection Boundary Statement my Ministry Faiser Mustafa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites