Manjummel Boys திரைப்படத்திற்கு இளையராஜாவினால் வந்த சிக்கல்!

0
42

இந்தியாவின் கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் Manjummel Boys.

இது மலையாளத் திரைப்படம் என்றாலும் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

5 கோடி இந்திய ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட Manjummel Boys திரைப்படம், 200 கோடி இந்திய ரூபாவிற்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தில், கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின் சமூக வலைத்தளங்களில் குறித்த பாடல் மிகப்பெரும் வைரலானது.

இந்தநிலையில் குணா திரைப்படப் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டு Manjummel Boys திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா கடிதம் ஒன்றை அனுப்பி இழப்பீடு கோரியுள்ளதுடன் குறித்த பாடலையும் படத்திலிருந்து நீக்குமாறு கோரியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்தச் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.