20 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம்

0
687
Salary Colombo Municipal Council members increased 20 thousand

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானம் நிறைவேறியுள்ளது. Salary Colombo Municipal Council members increased 20 thousand 

மாநகர சபையில் நேற்று (24) நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் போது இந்த தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேயர் ரோசி சேனாநாயக்கவினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் சம்பளம் சகல கொடுப்பனவுகளும் அடங்களாக 34 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபை உறுப்பினர்களுடைய கொடுப்பனவுகளையும் அதிகரித்துக் கொள்வதற்கு கொழும்பு மாநகர சபை முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tags :- Salary Colombo Municipal Council members increased 20 thousand

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites