நண்பர்களுடன் கடலில் நீராடிய களிப்பில் வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

0
365
high speed cycling boy died bathed paasikuda sea

(high speed cycling boy died bathed paasikuda sea)
பாசிக்குடா கடற்பகுதியில் நீராடிய பின்னர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாகமாக பலியானார்.

செம்மண்ணொடையைச் சேர்ந்த 17 வயதான ஏ.எல்.அஸீம் என்ற இளைஞர் இன்று (25) நண்பர்களோடு பாசிக்குடா கடலில் நீராடச் சென்றிருந்தார்.

அதன்பின்னர், களிப்பில் நண்பர்களோடு மோட்டார் சைக்கிளில் வேகமாக தமது இருப்பிடம் நோக்கி விரைந்த போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பம் ஒன்றில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மரண விசாரணைகளுக்காக வாழைச் ​சேனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த மற்றொரு இளைஞன் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(high speed cycling boy died bathed paasikuda sea)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites