முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்

0
570
Kidnapping school student sexual abuse mullaitivu

முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவர், வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (Kidnapping school student sexual abuse mullaitivu)

முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியை பளையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன், நேற்று தனது நண்பர்களுடன் இணைந்து பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வாகனமொன்றில் கடத்தி சென்றுள்ளார்.

குறித்த மாணவியை பளைப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு உடையார்கட்டுப் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.

மாணவி வீடு திரும்பாத நிலையில் நேற்றைய தினம் மாணவியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞன் குறித்த மாணவியை உடையார்கட்டு பகுதியில் வாகனத்தில் கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளார்கள்.

இதனையடுத்து, மாணவி நடந்த சம்பவத்தை தாயாரிடம் முறையிட்டுள்ளார். குறித்த மாணவியுடன் தாயார் பொலிஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கடத்திய இளைஞனை தேடி பளைப் பிரதேசத்திற்கு சென்று, கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு இளைஞனை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Kidnapping school student sexual abuse mullaitivu