300,000 ரூபா வங்கிக் கொள்ளை – துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு படுகாயம்

0
424
Woman injured shooting bank robbery Gandara tamilnews

(Woman injured shooting bank robbery Gandara tamilnews)

கந்தர, பரவாஹெர பகுதியிலுள்ள வங்கியொன்றில் இன்று மாலை 300,000 ரூபா கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத 4 பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (21) பிற்பகல் 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கொள்ளைச் சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வங்கிக்குள் இருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Woman injured shooting bank robbery Gandara tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites