காங்கேசன்துறையில் நான்கரை ஏக்கர் காணி மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பு

0
428

(lands controlled military jaffna Kankesanthurai area handed public)

யாழ்ப்பாண காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் பாவனைக்கு இன்று (21) கையளிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை மத்தி ஜே 234 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக அந்த பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் காணிகளுக்கான சான்றிழ், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

தேல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

(lands controlled military jaffna Kankesanthurai area handed public)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites