முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட அரசியலமைப்பில் எந்த தடையும் இல்லை

0
419
restriction constitution compete former presidents Chandima Weerakkody

(restriction constitution compete former presidents Chandima Weerakkody)

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முறைக்கமைய, ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் எந்தவித தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் மீண்டும் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

நாட்டில் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த வரலாற்றை நோக்குமிடத்து, புதிதாக கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்ட சீர்திருத்தத்திற்கமைய ஒரு ஜனாதிபதியின் பதவிகாலம் 5 வருடங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அமைவாகவேயே முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சிபுரிந்தனர்.

அன்று ஜனாதிபதியானவர், பிரதமர் உட்பட அரச தரப்பில் அனைத்து பதவிகளுக்கும் உரியவர்களை நியமிக்கும் பொறுப்பை கொண்டிருந்ததோடு, அரசியலமைப்பினூடாக நாடாளுமன்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய தேவையின்மை மற்றும் நாடாளுமன்றத்தினை கலைக்கக்கூடிய அதிகாரங்களை கொண்டிருந்தார்.

எனினும், நடைமுறையிலுள்ள ஜனாதிபதிக்கு அவ்வாறான பலங்கள் இல்லை. 19 ஆம் அரசியலமைப்பின் கீழ் நாட்டின் ஜனாதிபதியாகும் நபர் மீண்டும் இரண்டாவது முறையாக பதவியிலிருக்க முடியாது என 31 ஆவது பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய பிரிவில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச பெற்ற ஜனாதிபதி பதவியும் இன்று மைத்தரிபால சிறிசேன பெற்ற பதவியும் வேறானதாகும்.

அதனை மிகத் தெளிவாக பார்த்து தெரிந்துக் கொள்ளுமிடத்து தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு தேவையாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச நடைமுறையிலுள்ள ஜனாதிபதி பதவிக்கு தேர்தலில் போட்டியிடலாம்.

நாட்டில் ஒரு சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு வாக்குகளை வழங்கவும் சிலர் மஹிந்தவுக்கு வாக்குகளை வழங்கவும் தயாராகவேயே உள்ளனர். இந்த நிலையில் நாட்டில் வாக்குரிமையுள்ள அனைத்து மக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தமது பிரதான மனித உரிமைகள் தொடர்பில் வித்தியாசமென்றினை பெற வேண்டும் என நாம் நம்புகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

(restriction constitution compete former presidents Chandima Weerakkody)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites