ஜனாதிபதி தேர்தல்; சங்கக்காரவின் பெயர் முன்னிலை – ஐரோப்பிய பிரதிநிதிகள் சந்திப்பு

0
683
Presidential election kumar sangakkara name presence

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளோரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் பெயர் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Presidential election kumar sangakkara name presence)

எனினும் அரசியலில் பிரவேசிப்பதற்கு தனக்கு உத்தேசம் இல்லை என்றும் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியலும் மக்கள் சேவையும் மிகவும் கடினமான பொறுப்புள்ள செயற்பாடுகள் எனவும், ஒரு நாளும் அரசியலில் பங்குபற்றும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாட்டுக்காக தனது நேரத்தை அர்ப்பணித்தமையினால் தனது குடும்பத்திற்கு முதலிடம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டில் அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் எப்படியாவது சங்கக்காரவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஆசியாவின் சக்திவாய்ந்த நாட்டின் இராஜதந்திரி ஒருவரும் ஐரோப்பாவின் இரண்டு பிரபல நாடுகளின் தூதுவர்களும், சங்கக்காரவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேசத்தில் இருந்து அழைப்பு வருவதால் மறுபடியும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Presidential election kumar sangakkara name presence