வெலிக்கடை சிறையில் மீண்டும் மோதல் – 11 பேர் காயம்இ 52 பேர் இடமாற்றம்

0
387
Clashes Welikada Prison 11 injured 52 inmates transferred

(Clashes Welikada Prison 11 injured 52 inmates transferred)

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் இன்று (20) மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதன் விளைவாக அவர்களுக்கிடையில் பாரிய மோதல் வெடித்துள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் சம்பவத்தை அடுத்து அதிகாரிகள் 8 பேர் மற்றும் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சிறைச்சாலை காவலில் இருந்த 52 சிறைக்கைதிகள் வெலிகடை சிறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 52 சிறைக்கைதிகளும் குருவிட்ட, காலி, போகம்பற மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Clashes Welikada Prison 11 injured 52 inmates transferred)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites