“தனி நாட்டு போராட்டத்துக்காக முஸ்லிம்கள் ஆயுதங்களை பதுக்கியுள்ளனர்” : டொன் பிரியசாத்

0
1177
Muslims LTTE weapon Priyasad Complaint

தனி நாட்டு போராட்டத்திற்காகவே முஸ்லிம்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக சிங்ஹலே தேசிய அமைப்பின் பிரதம அமைப்பாளர் டொன் பிரியசாத் தெரிவித்துள்ளார். Muslims LTTE weapon Priyasad Complaint

இது தொடர்பில் இன்று அவர் டொன் பிரியசாத் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றையும் அளித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் காணப்பட்ட ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை அடுத்தே அவர் இம்முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் தெரிவித்த ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பிலும் தான் முறைப்பாடு செய்ததாக டொன் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னரும் இது தொடர்பில் தாம் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என டொன் பிரியசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் தனியான ஆட்சி நடைபெறுவதாகவும், அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தனி நாட்டு போராட்டத்துக்காக எனவும் டொன் பிரியசாத் குறிப்பிட்டுள்ளார்.