மும்தாஜையே டார்கெட் செய்யும் கமல் : நடிகை ஆர்த்தி குற்றச்சாட்டு..!

0
363
BiggBoss Arthi support tweets mumtaz tamil news

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் வாரா வாரம் மும்தாஜையே டார்கெட் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஆர்த்தியும் அதையே தெரிவித்துள்ளார். BiggBoss Arthi support tweets mumtaz tamil news

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

பிக் பாஸ் 2 வீட்டில் மும்தாஜ் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசி விடுகிறார். சக போட்டியாளர்களுக்கு அழ வேண்டும் என்றால் மும்தாஜிடம் வந்து அழுது, ஆறுதல் பெறுகிறார்கள். மற்ற நேரத்தில் அவரை பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள்.

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோருக்கு அழ வேண்டுமானால் மும்தாஜ் மடி தேவைப்படுகிறது. மற்ற நேரத்தில் அவரை பற்றி மகத் உள்ளிட்டவர்களிடம் தவறாக பேசுகிறார்கள்.

மேலும், கமல் ஹாஸன் மும்தாஜையே டார்கெட் செய்வதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதுவும் வாரா வாரம் டார்கெட் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

”பிக் பாஸ் 2” பற்றி முன்னாள் போட்டியாளரான நடிகை ஆர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது.. :-

மும்தாஜ் பிரார்த்தனை பண்றது ஐஸு மற்றும் மகத்துக்கு பயமா இருக்காம். பிரார்த்தனைக்கு எதுக்கு பயப்படணும்? ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா? போறேன்னு சொல்கிறவங்களை போக விடாமல் கதவை லாக் பண்ணது தப்பு.

மேலும், ஐஸ் மற்றும் பாலாஜியை வெளியே அனுப்புங்க. கதவு திறந்ததை பார்த்ததும் பீதியாகிட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா அவ்வப்போது பேய் மாதிரி கத்துவது எல்லாம் மகத் காதில் தேன் வந்து பாய்வது போல உள்ளது போன்று. மும்தாஜ் ஐஸ்வர்யா மாதிரி கத்திப் பேசியது மட்டும் மகத்திற்கு பேய் மாதிரி கத்துவதாக தெரிகிறதாம்.

அத்துடன், மகத் உங்க பேச்சுக்கு பார்வையாளர்கள் மத்தியில் மதிப்பே கிடையாது என்பது வெளியே வந்த பிறகு தான் தெரியும்.

மேலும், மும்தாஜ் எது கொடுத்தாலும் சாப்பிடாதே, அவர் கையால் தண்ணீர் கொடுத்தால் கூட குடிக்காதே என்று மகத் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார்.

அந்த மும்தாஜோ, ஏதோ சூனியக்காரி போன்று பேசுகிறார் மகத். மும்தாஜ் பிரார்த்தனை செய்தால் மகத்துக்கு ஏன் பயம் வரணும்? ஒருவர் பிரார்த்தனை செய்வதை பார்த்து மகத் ஏன் பயப்பட வேண்டும்?”

இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

இன்று பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறப்படும் நபர் இவர் தான்..!

Tags :-BiggBoss Arthi support tweets mumtaz tamil news