யாழ். பெண் வெள்ளவத்தையில் தற்கொலை : மகளின் செயலால் நடந்த பரிதாபம்

0
602

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளவத்தையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.(jaffna woman commits suicide wellawatte,Tamilnews)

இரு பிள்ளைகளின் தாயான 46 வயது நிரம்பிய பிரியதர்ஷனி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த குறித்த தாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.

மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் மகள் கபொத உயர்தரத்தில் படிப்பினை தொடர மறுத்துள்ளார். எனினும் தாயார் படிக்க சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

எனினும் அவரது மகள் மறுத்துள்ளமையினால் விரத்தியடைந்த நிலையில் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna woman commits suicide wellawatte,