இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் குழுவினர், ஆகஸ்ட் 13 முதல் நாளொன்றுக்கு ஒரு ஃபர்ஸ்ட் லுக் வீதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்தில் அரவிந்த் சாமியின் கரக்டர் ஃபர்ஸ்ட் லுக் இப்பொழுது வெளியாகி உள்ளது. Arvind Swami Chekka Chivantha Vaanam First Look tamil news
இந்த படத்தில் அரவிந்த் சுவாமி ‘வரதன்’ என்ற பாத்திரம் வகிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் மிகவும் கடினமானவராகவும் முரட்டுத்தனமானவராகவும் தோற்றமளிக்கிறார். அவரது முகம் கோபத்தின் உணர்வை இந்த போஸ்டர் வெளிப்படுத்துகிறது, ஆனால் அவருடைய கோபத்தின் காரணத்தை அறிய திரைப்பட வெளியீடு வரை காத்திருக்க வேண்டும். சிவப்பு நிறங்கள் கலந்த நிழல்கள் படத்தின் கருப்பொருளுக்கு தீவிரம் சேர்க்கிறது.
அடுத்த மூன்று நாட்களில் ஏனைய மூன்று ஹீரோக்களான எஸ்.டி.ஆர்., விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் தோற்றமளிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாய் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செக்க சிவந்த வானம் தொடர்பான ஏனைய மேலதிக செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.
Tags: Arvind Swami Chekka Chivantha Vaanam First Look tamil news
<<RELATED CINEMA NEWS>>
சாமி ஸ்கொயர் படம் ரிலீசுக்கு தயாராம்
விராட் கோலி வேடத்தில் துல்கர் சல்மான்
பிறந்த நாளன்று ஆரம்பமாகிறதா அஜித்தின் அடுத்த பட பணி?
ஶ்ரீரெட்டிக்கு பதில் கொடுத்த சிம்பு!!
எமது ஏனைய தளங்கள்