ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த பக்கத்து வீட்டு பணக்காரர்

0
496
Girls Abuse Ethimaly Tamil News

2012 ஆண்டு தொடக்கம் ஆறு வருட காலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பராயமடையாத பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக எதிமலே பொலிஸார் தெரிவிக்கின்றனர். Girls Abuse Ethimaly Tamil News

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொடியாகலை, கம்மல்யாய பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதான 5 பிள்ளைகளின் தகப்பன் ஆவார். இவரின் ஐந்து பிள்ளைகளும் பெண் பிள்ளைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

119 அவசர அழைப்பு பிரிவினருக்கும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பட்டுக்கு அமைய சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட புலன்விசாரணைக்கு பின்னர் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2012 முதல் 2018 ஏப்ரல் மாதம் வரை இந்த மூன்று சகோதரிகளின் மூத்த சகோதரியை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியின் வயது 10. அதன் பிறகு 2012 முதல் 2018 கால பகுதியில் வயது 14ம் 08 மாதமுடைய இரண்டாவது சகோதரியையும் சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார்.

அதன் பின் கடைசியாக 2018 ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் 9 வயதான சிறு வயதுடைய கடைசி சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த சிறு வயதுடைய பாடசாலை மாணவிகளின் பெற்றோரை பொலிஸார் அழைத்து வினவியபோது அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இந்த சிறுமிகளிடம் வினவியபோது அனைத்தும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறிமிகளின் குடும்பம் ஏழை எளிய குடும்பம் என்பதால், பணவசதியுடைய இந்த சந்தேக நபர் நன்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சகோதரிகளின் மூத்த சகோதரிக்கு சந்தேக நபர் தனது டிராக்டரில் ஓட்டுனர் பயிற்சியும் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று சியம்பலான்டுவை நீதவான் முன் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும் எதிமலே பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.