நீதிமன்றுக்கு இன்று வந்தது புலிகள் விவகாரம் : 59 பேரிடம் வாக்குமூலம்

0
522
vijayakala maheswaran Ltte case

விடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து, அது சம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.(vijayakala maheswaran Ltte case)

இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பாக 59 வாக்குமூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டன. அதில் 06 அமைச்சர்கள், 14 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 30 ஊடகவியலாளர்களும் அடங்குவர் என்று தெரிவித்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை மீள அழைப்பதற்கு திகதி வழங்குமாறு பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைவாக இது தொடர்பான வழக்கை மீண்டும் ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி விசாரிப்பதற்கும், அதன்போது முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும், தகவல் அறிந்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தி தங்கம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:vijayakala maheswaran Ltte case,