ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புக்கள் திருட்டுத்தனமாக பதிவு

0
564
Journalists telephone calls Stealth recorded

ஊடகவியலாளர்கள் மற்றும் பலரின் தொலைபேசி அழைப்புக்களைத் திருட்டுத்தனமாக பதிவுசெய்யும் உபகரணங்களை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார். (Journalists telephone calls Stealth recorded)

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐப்பானில் நெக் என்ற மிகச் சிறந்த தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்து நுகேகொடையிலுள்ள வீடொன்றில் வைத்து, இதன் பொறுப்பதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

லங்காதீப ஆசிரியர் சிறி ரணசிங்க, தொலைக்காட்சி இணை ஆசிரியர் திஸ்ஸ ரவீந்திர பெரேரா மற்றும் லங்காதீப ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யவே இவ்வாறு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் கூட்டு எதிரணியினருக்கு மாத்திரமல்ல என்றும் அமைச்சர் ரவூப் ஹகீம்முக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நெத் செய்தி நிறுவனத்தின் செய்தி மேலாளர் ஒருவருக்கு அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Journalists telephone calls Stealth recorded