‘அம்மா உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக கருணாநிதிக்கு இதை செய்து இருப்பார்’ : சசிகலாவின் உறவினர்கள் பரபரப்பு தகவல்

0
718
jayalalitha karunanidhi

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான முத்துவேல் கருணாநிதி இறக்கும் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் அவர் இடம் ஒதுக்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.(jayalalitha karunanidhi,Tamilnews)

இது தொடர்பில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தனது டுவிட்டர் தளத்தில் இரு பதிவுகளை பதிவேற்றியுள்ளார்.

“அம்மா உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக கருணாநிதிக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்

அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே, தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடல் நலக்குறைவினால் காவேரி மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை காலமானதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு பக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.கட்சியினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கோரிக்கையினை தமிழக அரசு ஏற்கவில்லை. மாறாக சட்ட ரீதியான காரணங்களை தெரிவித்தது. இதனை தொடர்ந்து தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதுடன், தமிழக அரசின் செயலை அனைத்து கட்சியினரும் கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:jayalalitha karunanidhi,jayalalitha karunanidhi,