தாய் மற்றும் கணவனுடன் இணைந்து ஹெரோயின் விற்ற பெண் கைது

0
620
Heroin's drug distribution arrested Woman

தனது தாய் மற்றும் கணவனுடன் பலகாலமாக ஹெரோயின் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், சுமார் 20 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயினுடன் கொஹூவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (Heroin’s drug distribution arrested Woman)

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு நடத்தியுள்ளதாகவும் சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் கிராம் 9 ஆம் 529 மில்லிகிராமும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தெகிவளை ஸ்ரீவனரதனாராம பிரதேசத்தில் வீடொன்றில் இந்த கடத்தல் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக கொஹூவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் கணவனும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தார் எனவும் தற்போது போதைப் பொருளுக்கு அடிமையாகி வேறு பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படுள்ள சந்தேக நபரின் தாயும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டணை பெற்று வருகின்றார் எனவும் இவர்கள் இருவரும் ஒன்றாக போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் 2014 ஆம் ஆண்டும் மற்றும் 2017 ஆம் ஆண்டும் சந்தேக நபர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இச் சம்பவம் தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Heroin’s drug distribution arrested Woman