நல்லாட்சி அரசுக்கு முதலமைச்சர் விக்கி எச்சரிக்கை!

0
546
North Chief Minister Vigneswaran Warns Maithripala Government

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், சுயநிர்ணய உரிமைகளை வழங்கும் வகையிலுமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். North Chief Minister Vigneswaran Warns Maithripala Government Tamil News

தமிழ் மக்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது,

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பு ஒன்றை முன்வைக்காமல் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. தென்னிலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களது இருப்பை விழுங்க ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சீ.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites