போராடி தோற்றது பெல்ஜியம் – இறுதிப் போட்டியில் பிரான்ஸ்

0
428
tamilnews france meet belgium semi finals fifa world cup

(tamilnews france meet belgium semi finals fifa world cup)

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.

இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.

ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 – 0 என சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன.

முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. தற்போது பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்துள்ளன.

1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாட உள்ளன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லத் தயாராக உள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன.

நாளை இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

தகவல் மூலம் – தமிழ்மைக்கேல்

(tamilnews france meet belgium semi finals fifa world cup)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை