விஜயகலாவின் மேடைப்பேச்சு பற்றி விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை

0
378
Attorney General instructed Inspector General VIjayakala speech

(Attorney General instructed Inspector General VIjayakala speech)

தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து காரணமாக ஐக்கிய தேசிய கட்சியாகவும், அமைச்சு ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தநிலையில், விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரி கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

(Attorney General instructed Inspector General VIjayakala speech)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை