கிரிபத்கொடையில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவியும் காதலனும் கைது!!

0
704
His wife boyfriend arrested connection tragedy murder Kiribathgoda

(His wife boyfriend arrested connection tragedy murder Kiribathgoda)

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் வெட்டுக்காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியும், மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவரது சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.

ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே கொலை செய்யப்பட்டவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்தவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் மனைவி தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்து இந்த கொலையை மேற்கொண்டதாகவும், தடயங்களை மறைப்பதற்கு முயற்சித்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலை உயிரிழந்தவரின் மனைவியின் முழு திட்டமிடலுடன் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், முன்னுக்கு பின் முரணான விதத்தில் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அவர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

(His wife boyfriend arrested connection tragedy murder Kiribathgoda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை