கொலைக்கார கோட்டாபயவால் இலங்கையின் ஜனாதிபதியாக வரவே முடியாது – மேர்வின் சில்வா

0
423
nobody can deny Rajapaksas family received money illegally

(nobody can deny Rajapaksas family received money illegally)
ராஜபக்ஷ குடும்பத்தினர் முறைகேடாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

டி.ஏ.ராஜபக்ச, டி.என்.ராஜபக்சவினர் யாரிடமும் பணத்தை பெற்றிருக்க மாட்டார்கள்.

ஆனால், தற்போதுள்ள ராஜபக்ச குடும்பம் எந்தவொரு தரப்பிடமும் பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று நினைத்தாலும் அல்லது கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

பணத்தை கையாளும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடம் இருந்தது. பசில் ராஜபக்ச தனது குடும்பத்திற்கான பங்கு தரகை பெற்றுக்கொள்வர் என்பது முழு உலகத்திற்கும் தெரிந்த விடயம்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை புகழ்பெற்ற பத்திரிகை, ராஜபக்சவினர் குற்றமற்றவர்கள் என்றால், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஊடாக அந்த பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அதனூடாக தம்மை அவதூறாக பேசிய பத்திரிகையிடம் அபராதத்தை கேட்க முடியும்.

அவ்வாறு எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை என்று சீன அரசாங்கம் கூறவேண்டும்.

அதனை விடுத்து, நாடாளுமன்றத்தில் இருப்பவர்களும், என்னை போன்றவர்களும் மகிந்த ராஜபக்ச பணத்தை பெற்றார் எனக் கூறினால், நாங்கள் அவர் மீதுள்ள விரோதம் காரணமாக குற்றம்சுமத்துகிறோம் என்று கூவுவார்கள்.

பணத்தை பெறவில்லை என்று கூறினால், மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக கூறுகிறோம் என்று சொல்வார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்கான சிறந்த பதில் மகிந்த ராஜபக்சவிடமே உள்ளது.

அடுத்த பதில் சீன அரசாங்கத்திடம் இருக்கின்றது. அடுத்தது நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதே தீர்வு.

இவற்றை செய்யவில்லை என்றால் பணத்தை பெற்றுக்கொண்டார்கள் என்று உறுதிப்பட கூற வேண்டும்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை அவர் மறுக்கவும் முடியாது. உண்மையை கூறவும் தரையில் அமரவும் எவருடைய அனுமதியும் தேவையில்லை.

நான் நக்சலைட் என்ற குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றவன். அரசியலில் ஈடுபட்டு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை இழந்தவன்.

அவன்கார்ட் பற்றி எனக்கு விபரங்கள் தெரியும், அந்த நிறுவனத்தின் மூலம் பல பில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது. கடற்படைக்கு கிடைக்க வேண்டிய பணம், கோட்டாபய ராஜபக்ச தலைமையில், திருட்டு வழியில் வெளியில் சென்றது.

இவற்றை கூற நான் அச்சப்படமாட்டேன். இதுவரை அது பற்றி விசாரணைகள் நடக்கவில்லை.

அதேவேளை நாட்டில் ராஜபக்ச ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக வர மாட்டார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறி சிலர் அவருக்கு ஆசை தூண்டி விட்டுள்ளனர்.

இதனால், அவர் தற்போது ஜனாதிபதி என்ற நினைப்பில் நடக்கின்றார்.

ஜனாதிபதியாகவே மூச்சு விடுகின்றார். ஜனாதிபதி என்ற எண்ணத்திலேயே சிரிக்கின்றார்.

சாப்பிடுவதும் ஜனாதிபதியை போல். வீட்டிலும் ஜனாதிபதி என்ற நினைப்பிலேயே வாழ்ந்து வருகிறார் என்றே நான் நினைக்கின்றேன்.

அவர் கனவு காண்பதை அவதானித்தால் உறங்குவதும் அப்படியாகவே இருக்கும். இந்த விதத்தில் எதுவும் நடக்க போவதில்லை.

கோட்டாபய என்றுமே நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது.

நாட்டில் போர் நடக்கும் போது தனது இராணுவத்தையும், இராணுவத்தில் இருந்தவர்களையும் கைவிட்டு, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கோழைக்கு நாடு ஒன்றை ஆட்சி செயய் முடியுமா? என்றும் மேர்வில் சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

(nobody can deny Rajapaksas family received money illegally)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites