சர்வதேச கடல் எல்லையின் பெரும்பகுதி இலங்கைக்கு – விரைவில் கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்

0
157
16 lakh sea waters available Sri Lanka across Indian Ocean

(16 lakh sea waters available Sri Lanka across Indian Ocean)

இந்திய சமுத்திரத்தின் எல்லை ஊடாக மேலும் 16 லட்சம் சதுர கிலோ மீற்றர் கடற்பகுதி விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கடலாய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கிடைக்கவுள்ள கடல் பிரதேசம் இலங்கையை போன்று 23 மடங்கு பெரியதாகும்.

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான சர்வதேச மகாநாட்டில் விவாதிக்கப்பட்டமைக்கு அமைய இலங்கைக்கு சட்டரீதியான உரிமை கிடைக்கவுள்ளது.

இந்த பாரிய அளவு கடல் எல்லையில் உள்ள பெற்றோலியம் எரிவாயு மற்றும் பெறுமதி மிக்க எரிவாயு வகைகளை பயன்படுத்தல், அகழ்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து உரிமையும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசேடமாக கடல் மட்டத்தின் உரிமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த பாரிய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்த மாநாட்டிற்கமைய இலங்கைக்கு புதிதாக கிடைக்கவுள்ள கடல் உரிமை தொடர்பில் தற்போதும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

(16 lakh sea waters available Sri Lanka across Indian Ocean)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites