மயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்!

0
194
Colombia beat Senegal FIFA world cup 2018

பிபா உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் எச் குழுவுக்கான போட்டியில் கொலம்பிய அணி வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் செனகல் அணியை எதிர்கொண்ட கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டயாத்தில் களமிறங்கிய செனகல் அணி மயிரிழையில் வாய்ப்பை தவறவிட்டது.

இரண்டு அணிகளும் மோதிய நேற்றைய போட்டியின் முதற்பாதியில் கோல்கள் பெறப்படாத நிலையில், போட்டியின் 74வது நிமிடத்தில் கொலம்பிய அணியின் யெரி மினா அணியின் வெற்றி கோலை அடித்தார்.

இதன்படி வெற்றிபெற்ற கொலம்பிய அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதேவேளை எச் குழுவுக்கான மற்றுமொரு போட்டியில் போலந்து அணியை எதிர்கொண்ட ஜப்பான் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தும் உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைத்தது.

செனகல் மற்றும் ஜப்பான் அணிகள் தலா நான்கு புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், தசம புள்ளிகளின் அடிப்படையில் நொக்கவுட் வாய்ப்பை ஜப்பான் அணி தக்கவைத்தது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Colombia beat Senegal FIFA world cup 2018,Colombia beat Senegal FIFA world cup 2018, Colombia beat Senegal FIFA world cup 2018