இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
449
Today Horoscope 29-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 15ம் தேதி, ஷவ்வால் 14ம் தேதி,
29.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி மதியம் 12:53 வரை;
அதன் பின் துவிதியை திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 3:50 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

.

மேஷம்:

கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்

 

ரிஷபம்:

அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகலாம். நிர்ப்பந்தத்தின் பேரில் கடன் வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்:

குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் மனம் விரும்பிய வகையில் சுப செலவு செய்து மகிழ்வீர்கள்.

கடகம்:

மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பாக யாரிடமும் சச்சரவு பேச வேண்டாம். லாபம் சுமாராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்:

திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தாமதமான பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் சலுகை பெறுவர். குழந்தைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்

கன்னி:

நீண்ட நாட்களாக இருந்த இடையூறு விலகும். தொழில், வியாபாரம் அபரிமிதமான முன்னேற்றம் பெறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு நற்பெயர் உண்டாகும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்..

துலாம்:

பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

விருச்சிகம்:

உறவினரால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறுகளை சரிசெய்வீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். பிள்ளைகளால் நன்மை உண்டு.

தனுசு:

மனதில் நல்ல எண்ணம் மேலோங்கும். உறவினரிடம் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்:

தாமதித்த பணி கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டை பெறுவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கும்பம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சியும் உழைப்பும் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

மீனம்:

இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. குழந்தைகளின் நற்செயல் ஆறுதல் தரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்