தவறான நட்பால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி (UPDATE)

0
900
Major Handa arrested brutal murder Major Dwivedis wife

(Major Handa arrested brutal murder Major Dwivedis wife)

புதுடெல்லியில் ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி தவறான நட்பால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா திவிவேதியே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

அமித் திவிவேதி நாகாலாந்தில் பணியாற்றிய போது ஹண்டா என்ற மற்றொரு ராணுவ அதிகாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஹண்டா அவ்வப்போது அமித் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது ஹண்டாவுக்கும் சைலஜாவிற்கும் நட்பு ஏற்பட்டது. பின் அமித் குடும்பத்துடன் இடமாற்றம் பெற்று டெல்லிக்கு திரும்பினார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹண்டாவும் மாற்றம் பெற்று டெல்லிக்கு சென்றார்.

பிறகும் ஹண்டாவுடன் சைலஜா நட்பைத் தொடர்ந்துள்ளார். ஹண்டாவின் குழந்தை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறான்.

சைலஜாவிற்கு தொலைபேசியில் அழைத்த ஹண்டா ராணுவ மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளார்.

இதனால் தான் ‘பிசியோதெரபி’ சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக் கூறிவிட்டு மருத்துவமனைக்கு சைலஜா சென்றார்.

பின் மருத்துவமனையில் இருந்து ஹண்டாவுடன் சைலஜா காரில் சென்றுள்ளார். அப்போது ஹண்டா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சைலஜாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு சைலஜா கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறில், ஹண்டா தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சைலஜாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பிக்க சைலஜா காரில் இருந்து குதித்துள்ளார். அப்போதும் விடாத ஹண்டா, சைலஜா முகத்தின் மீது காரை ஏற்றி கொன்றுள்ளார்.

புகையிரத பாலம் அருகே ஒரு பெண்ணின் பிணம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண்ணின் உடலை மீட்டனர்.

இருந்தபோதிலும் முகம் சிதைந்ததால், அந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் வெகுநேரம் ஆகியும் மனைவி காணாததால், அமித் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பொலிஸார் அமித்தை வரவழைத்து அந்த பெண்ணின் உடலை காண்பித்தனர்.

இது தன் மனைவி தான் எனக்கூறி அமித் கதறி அழுதார். இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் விசாரனையை துரிதப்படுத்தினர்.

அதில் இந்த படுகொலையை செய்தது ஹண்டா எனத் தெரிய வந்தது. ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்த ஹண்டாவை கைதுசெய்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Major Handa arrested brutal murder Major Dwivedis wife)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites