முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்

0
257
Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims

(Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims)

இலங்கை முஸ்லிம்களின் நன்மையை கருத்தில் கொண்டே தான் சிறையில் இருந்த போது ஜம்பர் காற்சட்டையை அணிய இணங்கியதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணலின் போதே இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நான் சிறைச்சாலைக்கு சென்ற போது எனது காவியுடையை அகற்ற மறுப்பு தெரிவித்தேன்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியாக லாஹிர் என்ற முஸ்லிம் அதிகாரியே செயற்பட்டு வந்தார்.

எனது எதிர்ப்பையும் மீறி அந்த அதிகாரி சட்டத்தை நிறைவேற்றினால் ஒரு முஸ்லிம் அதிகாரி எனது காவியை களைந்ததாக பேசப்படும்.

அமைதியான முறையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கை பாரதூரமாக செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்த விடயத்தை தூரநோக்குடன் சிந்தித்து தான் பௌத்த காவியுடையை களைந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

(Golagoda Athe Ghnanasara Thera considering benefit Sri Lankan Muslims)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites