காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்

0
361
tamilnews van driver killed luxury bus traveled Kattankudi Colombo

(tamilnews van driver killed luxury bus traveled Kattankudi Colombo)
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹா என பெயர் கொண்ட சொகுசு பஸ் கிரானில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் பயணம் செய்தவர்களில் மூவர் மரணித்துள்ளதுடன், வேனிலும் பஸ்ஸிலும்  பயணம் செய்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமுற்ற பயணிகளை பிரதேச வாசிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஐந்துக்கும் ​மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

 

 

 

 

(tamilnews van driver killed luxury bus traveled Kattankudi Colombo)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites