அப்பாவை ஆசையாகப் பார்க்கச் சென்ற இளைஞன்; சோகத்தில் குடும்பம்

0
132
22 year old boy missing

நோர்வூட் அலகொல தோட்டத்தைச் சேர்ந்த வீராசாமி முரளிதாஸ் என்பவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (22 year old boy missing)

ஜாஎல பகுதியில் தொழில் புரிந்து வந்த 22 வயதுடைய இவர், கடந்த 19 ஆம் திகதி காலை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரது அப்பாவை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளனார்.

எனினும் அவர், அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை என்றும் அவர் தொழில்புரியும் பகுதிக்கோ, உறவினர்களின் வீடுகளிற்கோ செல்லவில்லை என்றும் இவரது தொலைபேசி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இவரை கண்டவர்கள் அல்லது இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு : 0774437245, 0766424332, 0769146658

 tags :- 22 year old boy missing

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites