பெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணமும் – குறைக்கும் வழிமுறையும்!

0
827
reason increasing women hips, tamil health news, health tips in tamil, health news, women hips reduse tips,

{ reason increasing women hips }

இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கின்றார்கள்.

இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள். இதனால், பிடித்த உணவு முதல் உடை வரை அனைத்தையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரிக்க மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் தான். செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால், உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது.

அதுவும் அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆபத்தை சந்திக்க நேரிடுகின்றது.

மேலும், செயற்கை இனிப்பூட்டிகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உடற் பருமன் குறைய வேண்டும் என்றால் உடனே அசெயற்கை இனிப்பூட்டிகளை தவிர்ப்பது நல்லது.

இது ஒரு புறம் எனில், எப்படியோ இடுப்பில் சதை அதிகரித்து உடல் எடை அதிகரித்துவிட்டால் என்ன செய்து என்று பலர் தவிக்கின்றார்கள்.

அவர்கள் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.

Related image

காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது. எனவே இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.

மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

Tags: reason increasing women hips

<< RELATED HEALTH NEWS >>

*குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது!

*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..!

*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன?

*7 நாட்களில் கலராக ஆசையா?

*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்

*நம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை!

<<VISIT OUR OTHER SITES>>

http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/