இரு சிறுத்தைகளுக்கு இடையில் பயங்கர மோதல்; ஆண் சிறுத்தை பலி

0
311
horrific conflict two leopards Male leopard kills

வில்பத்து தேசிய வனவிலங்கு பூங்காவில் இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கரமான மோதலில் சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (horrific conflict two leopards Male leopard kills)

இந்த மோதலினால் உயிரிழந்த சுமார் மூன்று வயதுடைய சிறுத்தையின் சடலத்தை வனவிலங்கு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுத்தை ஆண் என்றும் இதன் கழுத்து பகுதியில் கடினமாகத் தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பற்களின் அடையாளங்களும் அதன் உடம்பில் பல காயங்களும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி மாலை இந்தப் பூங்காவில் தாங்கள் ஆய்வு நடத்திய போது இந்தச் சிறுத்தை குறித்த பகுதியில் நடமாடுவதை அவதானித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அன்றிரவோ அல்லது மறுநாள் காலையிலோ குறித்த சிறுத்தைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தம்மென்னவை பிரதேசத்தில் தாய் சிறுத்தையும் இரண்டு குட்டிச் சிறுத்தைகளும் நடமாடியதாகவும் உயிரிழந்த சிறுத்தை இரு குட்டிகளின் ஒன்றாகும் என்றும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

40 நாட்களாக தன்னார்வ அமைப்பொன்றினால் வீடியோ கமெராக்கள் மூலமாக செய்யப்பட்ட பதிவுகளின் படி இந்தச் சிறுத்தை உயிரிழந்த பிரதேசத்தில் வேறு பெரிய இரன்டு சிறுத்தைகள் நடமாடியதை அவதானித்துள்ளனர்.

அந்த சிறுத்தைகளில் ஒன்று இதனை தாக்கியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிரிழந்த சிறுத்தையில் சடலத்தை மரண பரிசோதனைக்காக அநுராதபுரம் கால்நடை வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

tags :- horrific conflict two leopards Male leopard kills

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites