அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் : போலீசார் அதிரடி முடிவு..!

0
324
Amala Paul Luxury car case Police file chargesheet,Amala Paul Luxury car case Police file,Amala Paul Luxury car case Police,Amala Paul Luxury car case,Amala Paul Luxury car
Photo Credit : Google Image

நடிகை அமலாபால் மீது, சொகுசு கார் விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.(Amala Paul Luxury car case Police file chargesheet)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அந்த கார்களை கேரளாவில் இயக்குவதாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

கேரளாவை விட புதுச்சேரியில் வாகன பதிவிற்கு வரி குறைவு என்பதால் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவதும், அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

அந்தவகையில், பிரபல நடிகை அமலாபால், நடிகரும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத்பாசில் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதுபற்றி கேரள குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையின் போது அமலாபால், சுரேஷ் கோபி, பகத்பாசில் ஆகியோர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் புதுச்சேரியில் படப் பிடிப்புகளில் பங்கேற்பதற்கு வசதியாக அங்கு தங்க வாடகைக்கு வீடு எடுத்து உள்ளதாக கூறி சில ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தியபோது அது போலி ஆவணங்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. மேலும், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமலாபால் உள்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

கவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா..? : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!

பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

2.0 படத்தின் டீஸர் ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Amala Paul Luxury car case Police file chargesheet

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??