தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தல்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

0
378
05 year old girl kidnapping Talawakelle Suspects released bail

தலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக்க சேபால உட்பட 8 பேரையும் பிணையில் விடுவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். (05 year old girl kidnapping Talawakelle Suspects released bail)

இதன்படி, ஒருவருக்கு தலா 10 இலட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணைகளில் குறித்த 08 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர்களுக்கு பிணை வழங்கிய நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்தார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரையில் ஒத்தி வைத்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மறுநாள் குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- 05 year old girl kidnapping Talawakelle Suspects released bail

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites