உபாதை காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்!

0
386
wriddhiman saha injury news Tamil

(wriddhiman saha injury news Tamil)

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா விளையாட மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கட் காப்பளார், துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வரும் விரிதிமன் சஹா உபாதை காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உபாதை குறித்து கருத்து தெரிவித்துள்ள சஹா, “என்னால் போட்டிக்கு முன்னர் குணமடைய முடியுமா என்பது தெரியவில்லை. எனினும் தேர்வுக்குழுவே இதுதொடர்பான முழு தீர்மானத்தையும் எடுக்கவேண்டும்.

இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது தொடர்பில் உறுதியாக கூறமுடியாது. வைத்தியர்கள் திரும்பவும் எக்ஸ்ரே சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதன்படி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது குறித்து கிரிக்கெட் சபையே இறுதி தீர்மானத்தை எடுக்கும்” எனவும் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் அணிக்காக விளையாடிய விரிதிமன் சஹாவின் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>