சட்டவிரோத குடியேற்றவாசிகளை பிரான்ஸிற்கு நாடு கடத்தியவர்களின் விசாரணை தள்ளி வைப்பு

0
519
France escorting migrants trial postponed, France escorting migrants trial, France escorting migrants, escorting migrants trial postponed, migrants trial postponed, Tamil Swiss News, Swiss Tamil news

(France escorting migrants trial postponed)

சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் பிரவேசிக்க உதவியதாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும், ஒரு இத்தாலிய பெண் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்பான விசாரணை நவம்பர் 8ம் திகதி வரை தள்ளிவைக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேறிற்றவாசிகளுக்கு உதவுவது என்பது ஒரு கிரிமினல் குற்றமா இல்லையா என்பதை பிரான்சின் மேல் அரசியலமைப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் வரை இந்த வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவர்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த இருவரும் முறையே 26 மற்றும் 24 வயதைச் சேர்ந்தோர்.

100 க்கும் அதிகமான பிரஞ்சு மற்றும் இத்தாலியர்களோடு இத்தாலிய எல்லையில் உள்ள Montgenèvre கணவாய் பகுதியை சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கைது செய்யப்பட்ட இரு சுவிஸ்வாசிகளும் கடந்தனர்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை எதிர்த்து ஆல்ப்ஸ் பகுதிக்கு அடுத்துள்ள Echelle கணவாயில், பான்-ஐரோப்பிய இயக்கத் தலைமையின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள், சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைத்ததால் இவர்கள் இலகுவாக கைது செய்யப்பட்டனர் என பொலிசார் கூறினர்.

France escorting migrants trial postponed, France escorting migrants trial, France escorting migrants, escorting migrants trial postponed, migrants trial postponed, Tamil Swiss News, Swiss Tamil news

Tamil News Groups Websites